Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ் மக்களுக்கு மட்டும் ஏன் இந்தப் பொருத்து வீடுகள்? – சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி.

In இலங்கை
Published: 04:27 GMT, Jul 28, 2017 |
0 Comments
1442
icon_com
This post was written by : Varothayan

வடக்கில் சிங்கள மற்றும் முஸ்ஸிம் மக்களுக்கு வழங்கப்படுகின்ற வீடுகள் கல் வீடுகளாக காணப்படுகின்றது. அப்படியான சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கு மட்டும் ஏன் இந்த பொருத்து வீடுகள் வழங்குகின்றீர்கள்? அவர்கள் இந்த நாட்டின் நிரந்தர குடியிருப்பாளர்கள் இல்லையா? என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

குறித்த பொருத்து வீட்டுத்திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) காலை மன்னாரில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. அங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் பேசிய சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி., ‘வடக்கு மக்களுடைய மீள்குடியேற்றம் தொடர்பாக பல சர்ச்சைகள் இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக மீள்குடியேற்றத்திற்கு வழங்கப்படுகின்ற வீட்டுத்திட்டத்தில் 6 ஆயிரம் வீடுகள் பொருத்து வீடுகளாக அமைத்துக் கொடுப்பதற்கு மீள்குடியேற்ற அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

உண்மையில் இவ்விடயம் தொடர்பாக மக்களுக்கும், குறித்த வீட்டுத்திட்டத்தை பெற்றுக்கொள்ள முயற்சி செய்த அமைச்சர்களுக்கும் என்னுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

இலங்கையில் பல இடங்களில் வீட்டுத்திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. தென் பகுதியிலும் வீட்டுத்திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. வட பகுதியிலும் வீட்டுத்திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன. தென் பகுதியில் மக்களுக்கு வழங்கப்படுகின்ற வீடுகள் நிரந்தர கல் வீடுகளாகக் காணப்படுகின்றன.

வடக்கில் சிங்கள மற்றும் முஸ்ஸிம் மக்களுக்கு வழங்கப்படுகின்ற வீடுகள் கல் வீடுகளாக உள்ளன. அப்படியான சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கு மட்டும் ஏன் இந்த பொருத்து வீடுகள் வழங்குகின்றீர்கள்? அவர்கள் இந்த நாட்டின் நிரந்தர குடியிருப்பாளர்கள் இல்லையா?

ஏனெனில், அவர்கள் நிரந்தரமாக தங்களுடைய கலாசாரங்களுடன் வாழ்வதற்கு நிரந்தர கல் வீடுகள் தான் பொருத்தமானதாக இருக்கும். அந்த வகையில் அமைச்சர் சுவாமிநாதன், அமைச்சர் றிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் குறித்த பொருத்து வீட்டுத்திட்டம் தொடர்பில் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர்.

மீள்குடியேற்ற அமைச்சர் ரி.எம்.சுவாமிநாதன் அவர்களிடம் கேட்கின்றேன், தமிழ் மக்களுக்கு வடக்கில் வழங்கப்படுகின்ற இந்த பொருத்து வீடுகளை ஏன் நீங்கள் சிங்கள மக்களுக்கோ அல்லது முஸ்ஸிம் மக்களுக்கோ வழங்குவதற்கு முயற்;சி செய்யவில்லை. அல்லது அவர்கள் நிராகரித்த பின்னரா எங்களுடைய மக்களுக்கு குறித்த பொருத்து வீட்டுத்திட்டத்தை வழங்குவதற்கு நீங்கள் முயற்சி எடுக்கின்றீர்கள்?

அதேபோன்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்கள் ஏன் இந்த பொருத்து வீட்டை முஸ்ஸிம், சிங்கள மீள் குடியேற்ற செயலணி ஊடாக அந்த மக்களுக்கு வழங்குவதற்கு முயற்சி எடுக்கவில்லை. ஏனெனில் அவர்களுக்குத் தெரியும் குறித்த பொருத்து வீடுகள் நிரந்தரமான வீடுகள் இல்லை என்று அறிந்துள்ளமையினால் குறித்த வீடுகளை தங்களுடைய மக்களுக்கு கொண்டு செல்வதற்கு அவர்கள் விரும்பவில்லை. குறித்த நடவடிக்கைகளை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.

எல்லா மக்களும் இலங்கையில் சமத்துவமாக வாழ்வதற்கு இப்படியான பாரபட்ச அபிவிருத்திகள் எங்களுடைய மக்களுக்கு வேதனையளிக்கின்றது. அந்த வகையில் இந்த செயற்பாட்டை நிறுத்தி சகல மக்களுக்கும் நிரந்தர வீடுகள் பெற்றுக்கொடுக்க வேண்டும். எங்களுடைய மக்கள் நிரந்தரமாக கௌரவமாக வாழ்வதற்குறிய வழி வகைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.

இந்த 6 ஆயிரம் பொருத்து வீடுகளை மீள் பரிசீலினை செய்ய வேண்டும். குறிப்பாக நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் இத்திட்டத்தை மீள் பரிசீலனை செய்து எங்களுடைய மக்களுக்கு நிரந்தர வீடுகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளுகின்றேன்’ என்றார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg