Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அநாதரவாகக் கிடந்த முதலை மீட்கப்பட்டது

In இலங்கை
Published: 05:20 GMT, Jul 28, 2017 |
0 Comments
1351
icon_com
This post was written by : Varothayan
Crocodile

ஏறாவூர் – மாவடி வீதியில் சுமார் 3 அடி நீளமான சிறிய முதலையொன்று மின் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் முதலையொன்று அநாதரவாகக் கட்டப்பட்டக் கிடப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, ஸ்தலத்திற்குச் சென்று அதனை மீட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட முதலை மட்டக்களப்பு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டது.

தற்சமயம் பிரதேசத்தில் உள்ள குளம், குட்டைகள் வறட்சி காரணமாக வற்றி வருவதால் முதலைகள் அதிலிருந்து வெளியேறியிருக்கலாம் என்று சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg