Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அப்போது ஜல்லிக்கட்டு இப்போது நீட் தேர்வு: அவசரச் சட்டம் இயற்றப்படுமா?

In இந்தியா
Published: 06:22 GMT, Jul 28, 2017 |
0 Comments
1390
icon_com
This post was written by : Puvanes
jallikkattu_neet001

நீட் தேர்வு குறித்து தமிழகம் முழுதும் பல்வேறு எதிர்ப்புகள் வெளிப்படுத்தப்பட்டு வரும் நிலையில், குறித்த தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் முகமாக அவசரச் சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு மத்திய அரசு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீட் தேர்வானது தமிழகத்தில் பெரும் பிரச்சினையாக வெடித்துள்ள நிலையில், நடப்புக் கல்வியாண்டு அல்லது ஓரிரு ஆண்டுகளுக்கு மட்டும் ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசு முன்வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், மருத்துவப் படிப்புக்கான தேசிய நுழைவுத் தேர்வான ‘நீட்’ காரணமாக மாநில பாடத்திட்டத்தில் கல்வி பயின்ற தமிழக மாணவர்கள் பாதிப்படைந்துள்ளதால் பாரிய எதிர்ப்புப் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இதேவேளை, அண்மையில் ஜல்லிகட்டு தொடர்பில் உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்த போது அவசரச் சட்டம் இயற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

எனினும் மாணவர்கள் மத்தியில் வெடித்த ஜல்லிக்கட்டு போராட்டம் உலகம் முழுவதும் பூதாகரமாக உருவெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg