Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் பதவி ராஜினாமா

In
Published: 06:30 GMT, Jul 28, 2017 |
0 Comments
1629
icon_com
This post was written by : Elakkiya

ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் ரொமோமி இனாடா பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் நெருங்கிய கூட்டாளியான ரொமோமி இனாடா அமைதி காப்புப்பணி தொடர்பான முக்கிய  ஆவணங்களை மூடி மறைத்தாக குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் ஷின்சோ அபேயிடம் கையளித்துள்ளார்.

ஷின்சோ அபேயின் ஆதரவாளராக கருதப்படும் இவர் தீவிர தேசியவாத கருத்துக்களை பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தென்சூடானில் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் அமைதிகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஜப்பான் படையினரின் பதிவுகள் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இரண்டுமாதங்கள் கழித்து குறித்த தரவுகள் கணனிகளிலிருந்து திட்டமிட்டே அழிக்கப்பட்டதாக ஜப்பானிய அதிகாரிகளால் குற்றம்சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg