Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ்நாடு பிரிமீயர் லீக்: காரைக்குடி காளை அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

In கிாிக்கட்
Published: 06:53 GMT, Jul 28, 2017 |
0 Comments
1328
icon_com
This post was written by : Anojkiyan
kaalai

தமிழ்நாடு பிரிமீயர் லீக் ரி-ருவென்ரி தொடரின் 6வது லீக் போட்டியில், காரைக்குடி காளை அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

திருநெல்வேலி மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் காரைக்குடி காளை அணியும், மதுரை சுப்பர் ஜியன்ட் அணியும் பலப்பரீட்சை நடத்தின. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற காரைக்குடி காளை அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய காரைக்குடி காளை அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ஓட்டங்களை குவித்தது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக விஷால் வைத்தியா 65 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் சந்திரசேகர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து 186 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மதுரை சுப்பர் ஜியன்ட் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 142 ஓட்டங்கள் மட்டுமே பெறமுடிந்தது. இதனால் காரைக்குடி காளை அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அணியின் அதிகபட்ச ஓட்டமாக ஷாருக்கான் 39 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் மோகன் பிரசாந்த், ராஜ்குமார் தலா மூன்று விக்கெட்டுகளை சாய்த்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக மோகன் பிரசாந்த் தெரிவுசெய்யப்பட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg