Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பார்சிலோனாவில் ரயில் விபத்து: 48 பேர் காயம்

In ஐரோப்பா
Published: 07:10 GMT, Jul 28, 2017 |
0 Comments
1618
icon_com
This post was written by : Elakkiya

ஸ்பெய்னின் பார்சிலோனா நகரில் இடம்பெற்ற ரயில் விபத்தில் குறைந்தது 48 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரான்சியா ரயில் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ரயில் நிலையத்திற்குள் நுழையும்போது நடைமேடையில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது  ரயிலின் தடுப்பு பிரயோகிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்த 48 பேரில் புகையிரத சாரதி உட்பட ஐவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஸ்பெய்ன் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் ரயிலின் முன்பக்கம் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg