Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரரின் விக்கெட்டை வீழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது: பிரதீப்

In கிாிக்கட்
Updated: 07:39 GMT, Jul 28, 2017 | Published: 07:39 GMT, Jul 28, 2017 |
0 Comments
1842
This post was written by : Anojkiyan

உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரரான விராட் கோஹ்லியின் விக்கெட்டை வீழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது என இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் கூறியுள்ளார்.

காலியில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் நேற்றைய ஆட்டநேர முடிவின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“முதலில் சரியாக பந்து வீசவில்லை என்றாலும் பிறகு நன்றாக வீசினேன். இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரர், அவர் விக்கெட்டை வீழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது.

நான்கு விக்கெட் கிடைத்த பிறகு தொடர்ந்து 15 ஓவர்கள் பந்து வீசினால் சோர்வு ஏற்பட்டுவிடும். அதன் பின்னர் பவுன்சர் பந்துகளாக வீசினேன், அந்த பவுன்சர் தான் விக்கெட்டை எனக்கு தந்திருக்கிறது” என கூறினார்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸிற்காக 600 ஓட்டங்களை குவித்தது. இலங்கை தரப்பில் பிரதீப் 6 விக்கெட்டுகளை சாய்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg