Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யூனிஸ்கானால் பாகிஸ்தான் அணிக்கு ஏகப்பட்ட சேதம்: கம்ரன் அக்மல் காட்டம்

In கிாிக்கட்
Updated: 09:40 GMT, Jul 28, 2017 | Published: 09:40 GMT, Jul 28, 2017 |
0 Comments
1468
This post was written by : Anojkiyan

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் வக்கார் யூனிஸால், பாகிஸ்தான் அணிக்கு ஏகப்பட்ட சேதம் ஏற்பட்டுள்ளதாக அணியின் விக்கெட் காப்பளார் கம்ரன் அக்மல் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நல்ல நிலையில் இல்லாததன் காரணமாக அணியில் இடம்பெறமுடியாமல் சிக்கி தவிக்கும் கம்ரன் அக்மல், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் தலைவருமான வக்கார் யூனிசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “வக்கார் பயிற்சியாளராக தோல்வியடைந்தவர், அவரால் பாகிஸ்தான் அணிக்கு ஏகப்பட்ட சேதம். பரிசோதனை முயற்சிக்கான தன்னார்வத்தில் தங்களை நிரூபித்த வீரர்களை வீட்டுக்கு அனுப்பி, அணியைக் குட்டிச்சுவராக்கியதோடு 2-3 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டார்.

அணியை முன்னுக்கு எடுத்து செல்ல வக்கார் யூனிஸிடம் திட்டம் எதுவும் இல்லை. பயிற்சியில் அவர் கடினம் காட்டினாலும் வீரர்களின் திறன் வளர்ச்சி, கிரிக்கெட் வளர்ச்சி அவரால் சேதமடைந்தது. பங்களாதேஷ் அணிக்கெதிரான தொடரில் 7 புதுமுகங்களை அணிக்கு அவர் கொண்டு வந்தார். இதனால் ஒருநாள் மற்றும் ரி-ருவென்ரி தொடரை அவர்களிடம் முதல் முறையாக இழந்தோம்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg