Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உச்சநீதிமன்றின் அதிரடித் தீர்ப்பு: பாகிஸ்தான் பிரதமர் ராஜினாமா

In
Published: 09:40 GMT, Jul 28, 2017 |
0 Comments
1672
icon_com
This post was written by : Elakkiya

பனாமா ஊழல் குற்றச்சாட்டு விசாரணைகளை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப் பதவியில் நீடிக்க முடியாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பளித்துள்ள நிலையில் நவாஷ் ஷெரீப் பதவியை  ராஜினாமா செய்துள்ளார்.

பனமாவில் புகழ்பெற்ற சட்டநிறுவனத்தின் உதவியுடன் பல்வேறு நாடுகளின் பிரமுகர்கள் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக முதலீடு செய்துள்ளதாக கடந்த 2015 ஆம் ஆண்டு ஆவணங்கள் வெளியாகின. குறித்த பனாமா ஆவணங்களின் பிரகாரம் நவாஷ் ஷெரீப் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

இந்நிலையில்,  பனாமா கேட் ஊழல் விவகாரத்தில் நவாஸ் ஷெரீப் ஆதாயம் பெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும்  பிரதமர் பதவியிலிருந்து அவரை தகுதி நீக்கம் செய்வதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பளித்துள்ளனர்.

அத்துடன், நவாஸ் ஷெரீப் மீது வழக்குப்பதிவு செய்து அந்த வழக்கை தேசிய நம்பகத்தன்மை குழு விசாரணை செய்து 6 வாரத்திற்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, நாடாளுமன்றத்திற்கு நேர்மையற்ற தகவல்களை தெரிவித்ததால் பிரதமர் பதவியில் நீடிக்க நவாஸ் ஷெரீப்புக்கு தகுதியில்லை எனவும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், உச்சநீதிமன்றின் உத்தரவின் பிரகாரம், நவாஸ் ஷெரிப் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg