Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒன்ராறியோவில் கோர விபத்து: இருவர் உயிரிழப்பு-மூவர் காயம்

In கனடா
Published: 10:51 GMT, Jul 28, 2017 |
0 Comments
1549
icon_com
This post was written by : Anojkiyan
axc

ஒன்ராறியோ நெடுஞ்சாலை 48ல் ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட கோரமான வாகன மோதலில் இருவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

இருவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாகவும் 10வயது சிறுவர் உட்பட மூவர் ஆகாய மார்க்கமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெப்ப சோர்வு காரணமாக இரண்டு தீயணைப்பு வீரர்கள் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பல போக்குவரத்து லொரிகள், குறைந்தது ஒரு எஸ்யுவி போன்ற வாகனம் குறித்த விபத்தில் சம்பந்தபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் இது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg