Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மைக்ரோசொஃப்ட் பெயின்ட் செயலி மீண்டும்!

In அறிவியல்
Published: 10:40 GMT, Jul 28, 2017 |
0 Comments
1476
icon_com
This post was written by : Surenth
Microsoft Paint

மைக்ரோசொஃப்ட் பெயின்ட் செயலி முற்றிலுமாக கைவிடப்படவில்லை என்று மைக்ரோசொஃப்ட் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள மைக்ரோசொஃப்ட் நிறுவனம் “பெயின்ட் செயலியின் இரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. அந்த செயலி மூடப்படவில்லை. சமீபத்தில் வெளியிடப்பட்ட விண்டோஸ் 10 கிரியேட்டர்ஸ் அப்டேட்டில் பெயின்ட் செயலி இடம்பெறவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், பழைய பெயின்ட் செயலியின் போட்டோ எடிட்டிங் உள்ளிட்ட பெரும்பாலான வசதிகள் புதிதாக வெளியிடப்பட்டுள்ள பெயின்ட் 3D செயலியில் இடம்பெற்றுள்ளன.

கடந்த 32 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும் பெயின்ட் செயலிக்கு ரசிகர்கள் அதிகம் இருப்பதை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம். எனவே பெயின்ட் செயலி முழுமையாக கைவிடப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.” என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 32 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும் பெயின்ட் கிரபிக்ஸ் செயலிக்கு மூடுவிழா நடத்த மைக்ரோசொஃப்ட் நிறுவனம் முடிவு செய்ததாக செய்திகள் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், மைக்ரோசொஃப்ட் நிறுவனம் இந்த விளக்கத்தைக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg