Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்வாதிகார ஆட்சிக்கு அரசாங்கம் தயாராகிறது: மஹிந்த குற்றச்சாட்டு

In இலங்கை
Updated: 10:46 GMT, Jul 28, 2017 | Published: 10:43 GMT, Jul 28, 2017 |
0 Comments
1488
This post was written by : Vithushagan

நல்லாட்சி அரசாங்கம் சர்வாதிகார பயணத்திற்கு தேவையானவற்றை உருவாக்கி வருகிறது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள தனது அலுவலகத்தில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பணிப்புறக்கணிப்பை சீர்குலைக்க அரசாங்கம் அண்மையில் எடுத்த தீர்மானம்  சர்வாதிகார நடவடிக்கைக்கு   சிறந்த உதாரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

பொலிஸாரின் செயற்பாடுகள், பெற்றோலிய களஞ்சியத்திற்குள் இராணுவத்தை அனுப்பியது, மாணவர்கள் மீதான தாக்குதல், நாட்டின் வளங்களை விற்பனை செய்தல் என அரசாங்கம் தவறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டு மக்கள் இவை குறித்து உணர ஆரம்பித்துள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களின் நிலைப்பாட்டுக்கு செவி கொடுக்காத தற்போதைய அரசாங்கம். எதனை விற்பனை செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதோ அதனை விற்பனை செய்கிறது, அரசாங்கம் சர்வாதிகார பயணத்திற்கு தேவையானவற்றை உருவாக்கி வருகிறது எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg