Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழர்கள் மத்தியில் இருந்த எட்டப்பன்களால் ஆயுத போராட்டம் மௌனித்தது – அடைகலநாதன்

In இலங்கை
Published: 11:55 GMT, Jul 28, 2017 |
0 Comments
1645
icon_com
This post was written by : Arul Jesu

வடகிழக்கை பிரிப்பதற்கு எந்த கொம்பனாலும் முடியாது என நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் கடந்த 1983 ஆம் ஆண்டு ஜீலை மாதம் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் உள்ளிட்ட 53 அரசியல் கைதிகள் மற்றும் பொதுமக்களின் 34 ஆவது தியாகிகள் நினைவஞ்சலி நிகழ்வு நேற்று மட்டக்களப்பு அமெரிக்கன் மிஷன் தேவாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அடைக்கலசாதன் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு தொடரந்தும் உரையாற்றிய அவர் அரசாங்கம் இணைந்த வட கிழக்கில் சமஷ்டி முறையிலான தீர்வை தர மறுக்குமாயிருந்தால், தமிழர்களுக்கு பிரிந்து வாழும் சந்தர்பத்தை தரவேண்டும் என சர்வதேசத்திடம் நியாயம் கேட்க தயார் எனவும் அவர்  கூறினார்.

வடகிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்பதோடு சமஷ்டி முறையிலான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே தமது கொள்கை எனவும், கிழக்கு மாகாணமே கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு வித்திட்டதாகவும் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் இரத்தததை சிந்திய இளைஞர்களுடைய வீரம் இன்று கொச்சைப்படுத்தப்படுத்தப்படுவதாகவும், ஆயுதப் போராட்டத்திலும், அகிம்சை போராட்டத்திலும் தமிழர்கள் உச்சக்கட்டத்தை அடைந்த போதிலும், தமிழினத்திற்குள் ஒரு சில எட்டப்பன்கள் இருந்ததால் அவற்றை சாத்தியமாக்க முடியவில்லை எனவும் அவர் கூறினார்.

ஆயுதப் போராட்டத்தின் பலம்  இன்று  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலையில் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் தமிழ் மக்களின் எதிர்கால வாழ்வை வென்றெடுப்பதற்காக கூட்டமைப்பு  பிளவுப்பட கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg