Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

என்னால் பிரபாஸ் போல் மாற முடியாது என்கிறார் தனுஷ்!

In சினிமா
Published: 16:21 GMT, Jul 28, 2017 |
0 Comments
1601
icon_com
This post was written by : Vithushagan
dhanush-maari13-600-20-1490020621

”பிரபாஸ் போல் எப்போதும் என்னால் உடல் எடையை அதிகரிக்க முடியாது” என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

தமிழில் மட்டு மல்லாமல் ஹந்தி படங்களிலும் நடித்து வரும் தனுஷ் தற்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.

வி.ஐ.பி 2 படத்தின் புரோமோஷனுக்காக மும்பை சென்றிருந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவரிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது பிரபாஸ் போல் உடல் எடையை ஏன் ஏற்றவில்லை என்று அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் ‘ ”என்னால் அப்படி எடையை ஏற்ற இயலாது . எது என் பலம் என்பது எனக்கு தெரியும் அதேபோல் எது என் பலவீனம் என்பதும் எனக்கு தெரியும்.

நீங்கள் வெளியில் நடந்து சென்றால் என்னைப் போல் பல ஆண்களை உங்களால் பார்க்க முடியும் .சினிமாவில் நான் அவர்களின் பிரதிநிதியாகத்தான் இருக்கிறேன் . என்னை அவர்களில் ஒருவராகவே மக்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.

மேலும் நான் பார்ப்பதற்கு மற்ற ஹிந்தி நடிகர்கள் மாதிரி இல்லாததால் என்னை ஹிந்து இரசிகர்கள் ஏற்றுகொள்ள சில நாட்கள் ஆகலாம். சரியான கதாபாத்திரம் கொண்ட ஒரு நல்ல படத்திற்காக காத்திருக்கிறேன் . அவ்வாறு ஒரு படம் வரும்போது ஹிந்தியில் நடிப்பேன்” என்றார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg