Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முன்கூட்டியே தோல்வி கணிப்பே கூட்டு எதிரணியினரின் குழப்பத்திற்கு காரணம்: ராஜித

In இலங்கை
Published: 02:52 GMT, Jul 29, 2017 |
0 Comments
1535
icon_com
This post was written by : Anojkiyan
Rajitha-415x260

நாடாளுமன்றத்தில் பெற்றோல் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் சம்பந்தமாக இடம்பெற்ற வாக்கெடுப்பில், தோல்வியை முன்கூட்டியே அறிந்துக்கொண்டதாலேயே கூட்டு எதிரணியினர் குழப்பத்தை ஏற்படுத்தியதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கூட்டு எதிரணியினர் போலியான பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றார்கள். கொல்லன்னாவை பிரச்சினை பற்றி பேச்சுக்களை ஆரம்பித்து வழமை போல நாடாளுமன்றத்தை குழுப்புவதே கூட்டு எதிரணியின் முயற்சியாக அமைந்திருந்தது.

மகளிர் பாடசாலை மாணவிகள் சிலரும் கூட நாடாளுமன்ற அமர்வினை பார்வையிட வந்திருந்த நிலையில் கூட்டு எதிரணியினரின் பேயாட்டத்தை கண்டு அஞ்சி ஓடினார்கள். பாடசாலை மாணவியர் மக்கள் பிரதிநிதிகளை பார்த்து அஞ்சி ஓடுவதென்பது பாரதூரமான நிலைப்பாட்டினை வெளிப்படுத்துகின்றது.

கூட்டு எதிரணியினரின் இந்த செயற்பாட்டினால் அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம், எதிர்தரப்புக்களின் திருத்தங்கள் எவையும் இல்லாமலேயே கைசாத்திடப்படும்” என தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg