Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியாவில் சிமாட் போன் விற்பனையில் முதலிடம் வகிக்கும் சியோமி மற்றும் சாம்சங்

In அறிவியல்
Published: 05:18 GMT, Jul 29, 2017 |
0 Comments
1435
icon_com
This post was written by : Kemasiya
201612171933252803_OnePlus-plans-to-make-OnePlus-3T-in-India_SECVPF

இந்தியாவில் சிமாட் போன் விற்பனை சார்ந்து நடத்தப்பட்ட ஆய்வொன்றில் அதிகம் விற்பனையான சிமாட் போன்களின் பட்டியலில்  சியோமி, சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் முதலிடங்களை பிடித்துள்ளன.

இந்திய சிமாட்போன் சந்தையின் இரண்டாவது காலாண்டில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட சிமாட் போன்களில் சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 4, ரெட்மி 4 மற்றும் சாம்சங் ஹலக்ஷி ஜெ2 முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஒப்போ யு37 மற்றும் சாம்சங், கேலக்ஸி ஜெ7 முறையே நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களை பிடித்துள்ளது.

இத்துடன் இந்தியாவில் எல்டி வசதி கொண்ட சிமாட் போன்களின், எண்ணிக்கை 15 கோடிகளை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 4ஜி வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களில் இந்தியா தற்சமயம் சீனா மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. எனினும் அடுத்த ஆண்டு, இந்தியா அமெரிக்காவை பின் தள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg