Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகை சுத்த வேண்டும்- காஜலின் ஆசை

In சினிமா
Updated: 05:59 GMT, Jul 29, 2017 | Published: 05:57 GMT, Jul 29, 2017 |
0 Comments
1390
icon_com
This post was written by : Kemasiya
Kajal_agarwal_19276 (1)

உலகம் முழுவதும் சுத்த வேண்டும், வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும், முழுக்க முழுக்க பெண்ணை மையப்படுத்திய கதையொன்றில் நாயகியாக நடிக்க வேண்டும், இது என்னுடைய குறிக்கோல் என நடிகை காஜல்அகர்வால் இந்தியாவின் சஞ்சிகை இதழ் ஒன்றிற்கு அளித்த செவ்வியின் பொழுது தெரிவித்துள்ளார்.

குறித்த செவ்வியின் பொழுது மேலும் அவர் கூறியது, நான் அஜித்துடன் நடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. எப்பவுமே நான் எதையும் எதிர்பார்ப்பதில்லை என்னை தேடி வருவதை செய்வேன். அப்படி தான் அஜித்துடன் நடிப்பதற்கான வாய்ப்பும் அமையப்பெற்றது.

அதே போன்று விஜய் அவருடைய நடிப்பு மெருகேறிக்கொண்டே செல்கின்றது. அவருடன் முதல் படம் நடிக்கும் பொழுது பார்த்ததை விட மூன்றாவது படம் நடிக்கும் பொழுது இன்னும் அதிகமாக நடிப்பு திறனை வெளிக்காட்டுவதை அவதானித்தேன். என்னமாதிரி நடிக்கிறார், இவரால் எப்படி முடியும் என தோன்றும். மற்றும்படி அவரை பற்றி தனிப்பட்டு எதுவும் தெரியாது என விஜய், அஜித் பற்றி காஜல் தெரிவித்துள்ளார்.

மேலும் நான் முன்னுக்கு வர வேண்டுமெனில் கடின உழைப்பு அவசியம் என்பதே எனக்கு தெரிந்தது. அதை தான் நம்பகின்றேன், வெற்றி- தோல்வி என்பது மாறி மாறித்தானே வரும், ஆகையினால் எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ளது என்னிடம், என் வாழ்க்கையை பொறுத்தவரை பொறுப்பான, சொந்தக்காலில் உழைக்கும், ஓரளவு ஹான்ட்ஷமான, என் உயரத்துக்கு ஏற்ற,  என்னை புரிந்த கொண்ட ஒருவரே என் வாழ்க்கைதுணையாக முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg