Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ்நாடு பிரிமீயர் லீக்: திண்டுக்கல் அணியை வீழ்த்தி திருவள்ளுவர் அணி வெற்றி

In கிாிக்கட்
Published: 09:38 GMT, Jul 29, 2017 |
0 Comments
1235
icon_com
This post was written by : Anojkiyan
newsimage1472987496-1472996270-800

இரண்டாவது தமிழ்நாடு பிரிமீயர் லீக் ரி-ருவென்ரி தொடரின் 7வது லீக் போட்டியில், திருவள்ளுவர் வீரன்ஸ் அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) திருநெல்வெலி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் திருவள்ளுவர் வீரன்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, 17.5 ஓவர்களில் 83 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதில் அஸ்வின் வெங்கட்ராமன் அதிகபட்சமாக 19 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் ரஹில் ஷா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைதொடர்ந்து 84 என்ற எளிய வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய திருவள்ளுவர் வீரன்ஸ் அணி, 14.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதில் சித்தார்த் 37 ஓட்டங்களை அதிகபட்ச ஓட்டமாக பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் நடராஜன் மற்றும் சஞ்சய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக திருவள்ளுவர் வீரன்ஸ் அணி சார்பிர் பந்து வீச்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ரஹில் ஷா தெரிவுசெய்யப்பட்டார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg