Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலக சம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வெல்ல முடியும்: சாதனையாளன் அரிஸ் மெர்ரிட்

In விளையாட்டு
Updated: 07:43 GMT, Jul 29, 2017 | Published: 07:43 GMT, Jul 29, 2017 |
0 Comments
1337
This post was written by : Elakkiya

லண்டனில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உலக சம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வெல்ல முடியும் என உலக சாதனையாளரும் முன்னாள் ஒலிம்பிக் சம்பியனுமாகிய அரிஸ் மெர்ரிட் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க தடகள வீரரான அரிஸ் மெர்ரிட்டுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிறுநீரக மாற்றும் அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அதன்பின்னர் மெர்ரிட் பங்கேற்கும் முதலாவது உலகத்தர போட்டியாக லண்டன் உலக சம்பியன்ஷிப் போட்டி அமைந்துள்ளது.

இந்நிலையில் உலக விளையாட்டு அரங்கிற்கு மீண்டும் திரும்புவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அதனை சிறந்த முறையில் பயன்படுத்தவுள்ளதாகவும் அரிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெல்ஜியத்தில் நடைபெற்ற டையமன்ட் லீக் தொடரில் 110 மீற்றர் தடைதாண்டல் ஓட்டத்தை 12.80 விநாடிகளில் ஓடிமுடித்து உலக சாதனை படைத்த அரிஸ் அதே ஆண்டில் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg