Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய அணிக்கு மலிங்க சவாலாக இருந்திருப்பார்: இரசிகர்கள்

In கிாிக்கட்
Updated: 08:39 GMT, Jul 29, 2017 | Published: 08:38 GMT, Jul 29, 2017 |
0 Comments
1745
icon_com
This post was written by : Elakkiya
sri-lanka-vs-zimbabwe-5th-odi-match_cb48bc16-738a-11e7-a55a-ab3ca1304be3

இலங்கை டெஸ்ட் அணியில் லசித் மலிங்க இடம்பெற்றிருந்தால் இந்திய அணிக்கு சவாலாக இருந்திருக்கும் என கிரிக்கட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை மற்றம் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி மைதானத்தில் நடைபெற்றுவருகின்ற நிலையில் இலங்கை அணிக்கு 550 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியின் நிறைவுக்கு இன்னும் ஒருநாள் உள்ள நிலையில் இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமான இருக்கின்றது.

இந்நிலையில் இலங்கை அணியில் லசித் மலிங்க இடம்பெற்றிருந்தால் இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருந்திருப்பார் என மலிங்கவின் இரசிகர்கள் தரப்பிலும் விமர்சகர்கள் தரப்பிலும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், யாருக்கும் அச்சமின்றி தனது கருத்துக்களை தைரியமாக கூறும் வீரர் மலிங்க மாத்திரமே என இரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிய மலிங்க தனது முதல்போட்டியிலேயே ஆறு விக்கெட்களை வீழ்த்தி இலங்கை இரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தொடர்ந்து ஒவ்வொரு போட்டியிலும் தொடர்ச்சியாக தனது திறமையை வெளிப்படுத்தி இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளராக மாற்றம் பெற்ற மலிங்க கடந்த 2011 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg