Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய வடிவில் அழகாக மிளிரும் திரட்னிங் வேக்

In
Published: 08:49 GMT, Jul 29, 2017 |
0 Comments
1141
icon_com
This post was written by : Kemasiya
pizap (14)

காலம் காலமாக ஆபரணங்களில் ஈடுபாடு செலுத்தாத பெண்கள் இருக்கமுடியாது. பெண்களின் அலங்காரத்தில் அபரணத்திற்கு முக்கியபங்குள்ளது, அந்த வகையில் காலத்திற்கு காலம் ஸ்ரைல் மாறும் ஆபரணங்களில் தற்பொழுது புலக்கத்தில் உள்ள ஆபரணங்கள் திரட்னிங் வேக் ஆபரணங்கள்.

இவை கழிநூல் என்று சொல்லப்படும் ஆடை அலங்காரத்திற்கு பயன்படுத்தும் நூல் கொண்டு பின்னப்பட்டு முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டவை. குறித்த ஆபரணங்கள் பல்வேறு கலர்களிலும் உள்ளதோடு, அழகாகவும் ஆடைகளின் அழகை மெருகூட்டும் வகையிலும் அமையப்பெறுகின்றன.

ஆனால்  இந்த ஆபரணத்தை எந்த வகையான ஆடைக்கு அணிந்தால்   எம்மை அழகாக காட்டும் என்ற சந்தேகம் இருக்ப்பவர்கள் இதை படியங்கள். குறித்த ஆபரணத்தில் தோடு மட்டும் அணிவதாக இருப்பின் முழு நீள சல்வார்களுக்கு அணிந்த கொள்ளலாம். அல்லது ஹொட்டன் சாதாரண சல்வார்களுக்கு அணிந்து கொள்ளலாம். இல்லை மாலை காப்பு தோடு ஆகிய மூன்றும் அணிய வேண்டுமாக இரப்பின் அவை திருமணம் பூப்புனித நீராட்டு விழா போன்ற வைபவங்களுக்கு செல்லும் பொழுது ஹொட்டன் சாறிகளுக்கு அணிந்து கொள்ளலாம்.

சாறியின் கலருக்கு ஏற்ற போல் ஆபரணத்தின் கலரும் பொருந்தும் வகையில் அணிவது அழகை மெருகூட்டும். இல்லை கறுப்பு கோல்ட் என பொது நிறங்களில் அணிந்து கொள்ள முடியும்.  குறித்த ஆபரணம் பார்ப்பதற்கு அழகாகவும், பாவனைக்கு காலம் கூடியதாகவும், விலையில் ஓரளவு எளிமையாகவும் உள்ளமையினால் அனைத்து பெண்களுக்கும் பிடித்தால் போல் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg