Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கட்டுக்கு கொண்டுவரப்பட்டது பிரான்ஸ் காட்டுத் தீ!

In ஐரோப்பா
Published: 10:18 GMT, Jul 29, 2017 |
0 Comments
1705
icon_com
This post was written by : Sylviya
11

பிரான்ஸில் Bormes-les-Mimosas பகுதியில் பரவி வந்த காட்டுத் தீ தற்போது பெருமளவு கட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பொதுமக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், சில பகுதிகளில் தொடர்ந்தும் காட்டுத் தீ பரவி வருவதாக அண்மைய தகவல்கள் தெரிவித்துள்ளன. இதனால் பாதுகாப்பு காரணங்களின் நிமித்தம் பல சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த காட்டுத் தீ பரவ அதிகபடியான வெப்பமே காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் போதும், அதற்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தக் காட்டுத் தீயினால் சுமார் 7000 ஹெக்டேயர்களுக்கும் மேற்பட்ட நிலப்பரப்பு கருகிச் சேதமுற்றுள்ளதோடு சுமார் 10000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg