Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கூட்டு எதிரணி தங்கள் தலையில் மண்ணைப் போட்டுக் கொண்டுள்ளது – முஜிபுர் ரஹ்மான்

In இலங்கை
Updated: 10:01 GMT, Jul 29, 2017 | Published: 09:58 GMT, Jul 29, 2017 |
0 Comments
1372
icon_com
This post was written by : Puvanes
mujipur_rahman001

கூட்டு எதிர்க்கட்சியினர் தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிரக்கட்சியின் குழப்பத்தினால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர் கொழும்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

நாடாளுமன்றில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து நடைபெறவிருந்த விவாதம், கூட்டு எதிரணியின் குழப்பத்தினால் நடைபெறாமல் போனது.

மேலும், சீன ஒப்பந்தத்தினை மக்கள் அறிய நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்ததன் பின்பே அதில் கைச்சாத்திடப்படும் என அரசாங்கம் கூறியிருந்தது. எந்த ஒரு உடன்படிக்கையும் நாடாளுமன்றத்திற்கு கொண்டுவராமல் கைச்சாத்திட மாட்டோம் என உறுதியாக தெரிவித்திருந்தோம்.

அந்த வாக்குறுதியை சிதைக்கும் வகையில் கூட்டு எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு நாடாளுமன்ற செயற்பாடுகளை குழப்பியுள்ளனர்.

மஹிந்த ஆட்சியிலும் பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. அப்போது துறைமுக நகரத்தைக் கொடுக்கவும், சங்கிலாவிற்கு இராணுவத் தலைமையகத்தைக் கொடுக்கவும் பல ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின.

அவற்றில் ஒன்றையாவது அவர்கள் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்தார்களா? ஒன்றையாவது அமைச்சரவையில் சமர்ப்பித்தார்களா?

ஆனால் நாம் இந்த சீன ஒப்பந்தத்தினை அமைச்சரவையில் சமர்ப்பித்து, அதனை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரும்போது, இது தொடர்பாக விவாதிக்க ஏன் அவர்கள் நாடாளுமன்ற அமர்வில் இருக்கவில்லை.
ஏன் நாடாளுமன்ற செயற்பாடுகளை குழப்பியடித்தனர்.

இவற்றின் மூலமாக எவ்வாறாவது இந்த அரசாங்கத்தின் பயணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே இவர்களின் இலக்காக இருக்கிறது எனவும் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg