Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உரிமைக்காக போராடுவோம்: நாராயணசாமி

In இந்தியா
Updated: 16:04 GMT, Jul 29, 2017 | Published: 10:11 GMT, Jul 29, 2017 |
0 Comments
1481
icon_com
This post was written by : Surenth
Narayansamy

ஜனநாயக உரிமையை பறிக்க யார் முயற்சித்தாலும் எதிர்த்து போராடுவோம் என புதுவை முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுவை முன்னாள் முதலமைச்சர் குபேர் பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாராயணசாமி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மாநிலத்தின் உரிமைகளை மத்திய பாரதீய ஜனதா ஆட்சியில் போராடி பெற வேண்டிய நிலை உள்ளது ஏற்பட்டுள்ளது என்றும் மக்கள் நலத்திட்டங்களுக்கு சிலர் வேண்டுமென்றே முட்டுகட்டை இடுகின்றனர் என்றும் இதன் போது அவர் குற்றஞ்சுமத்தியிருந்தார்.

புதுவை மக்களுக்கு ஜனநாயகம் உரிமை உள்ளது என்றும் இதனைப் பறிக்க யார் முயற்சித்தாலும் எதிர்த்து போராடும் அதேவேளை, காங்கிரஸ் கட்சி எந்தவித மிரட்டலுக்கும் அடிபணியாது என்றும் சூளுரை விடுத்தார்.

மதவாத சக்திகளை புதுவை மக்கள் ஒரு போதும் ஏற்கமாட்டார்கள் எனவும் கொல்லைப்புறம் வழியாக ஆட்சியை பிடிக்கலாம் என்ற என்.ஆர்.காங்கிரசின் எண்ணத்தை முறியடிப்போம் மக்கள் தீர்ப்பிற்கு தலை வணங்க வேண்டும் என்றும் நாராயணசாமி குறிப்பிட்டார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg