Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

12வருடங்கள் போராடிய எனக்கு அங்கீகாரம் தந்தது விக்ரம் வேதா-பிரேம்

In சினிமா
Updated: 11:23 GMT, Jul 29, 2017 | Published: 11:23 GMT, Jul 29, 2017 |
0 Comments
1826
This post was written by : Kemasiya

விக்ரம் வேதா படத்துக்காக எனது ஸ்ரைலை ‘சத்யா’ கமல் போன்று இயக்குனர் மாற்றினார். கமலின் தீவிர ரசிகனான நான் அவரது கெட்டப்பில் நடித்ததும் அதற்கு பாராட்டுகள் குவிவதும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த அங்கீகாரம் கிடைக்க 12 வருடம் போராடி இருக்கிறேன் என விக்ரம் வேதாவின் பாத்திரம் பிரேம் குறித்த படம் தொடர்பான ஊடகவியலாளர்கள் சந்திப்பின் பொழுது தெரிவித்தள்ளார்.

‘விக்ரம் வேதா’ எனக்கு புதிய அடையாளத்தை கொடுத்திருக்கிறது. வெளியில்போகும் போது ரசிகர்கள் என்னை அடையாளம் கண்டு பிடித்து ‘சைமன்டா’ என்று சூழ்ந்து கொள்வது எனக்கு பெருமையாக இருக்கிறது. பல் மடங்கு ஆனந்தத்தை கொடுக்கிறது.

சின்னத் திரையில் இருந்து சினிமாவுக்கு வந்த பிறகு 26 படங்களில் நடித்து இருக்கிறேன். ‘விக்ரம் வேதா’ எனது 27-வது படம். இதுவரை 5-க்கும் மேற்பட்ட படங்களில் போலீஸ் வேடத்தில் நடித்து விட்டேன்.

இந்த படத்திலும் போலீஸ் வேடம் என்று இயக்குனர் ஷங்கர் காயத்ரி சொன்னதால் முதலில் மறுத்தேன். தற்போது சசிகுமாரின் ‘கொடிவீரன்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறேன். இனி நடிக்கும் படங்களில் எனக்குரிய பாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பேன் என அவர் மேலும் தெரிவித்தள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg