Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாந்தை மேற்கில் தனிநபர்களால் காணிகள் அபகரிப்பு!

In இலங்கை
Published: 13:21 GMT, Jul 29, 2017 |
0 Comments
1356
icon_com
This post was written by : Ravivarman
DS.S.KETESWRAN

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட பருப்புக்கடந்தான் பகுதியில் சுமார் 800 ஏக்கர் காணியை தனிநபர்கள் சிலர் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துள்ளதாக மந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், பிரதேச செயலகத்தில், இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றபோதே பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து இவர் மேலும் தெரிவிக்கையில்,

“தற்போது குறித்த காணியில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று அன்னாசிச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றது. இதற்கு வனவள ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சிலர் துணை நிற்கின்றனர்.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட பருப்புக்கடந்தான் பகுதியில் 1989 ஆம் ஆண்டு 287 ஏக்கர் காணி 650 பேருக்கு காணி அபிவிருத்தி கட்டளைச்சட்டத்தின் கீழ் பிரித்துக்கொடுக்கப்பட்டது.

தற்போது சில தனிநபர்கள் குறித்த காணிகளுக்கான ஆவணங்கள் தங்களிடம் உள்ளதாக கூறி அப்பகுதியில் உள்ள சுமார் 800 ஏக்கர் காணியினை புதிய அனுமதிப்பத்திரங்கள் தயாரித்து கையகப்படுத்தியுள்ளனர்.

எனவே மக்களுக்கு மாந்தை மேற்கு பகுதியில் வழங்கப்பட்டுள்ள காணிகளில் தமது எல்லைக்கற்களை போட்டுள்ள வன வள திணைக்களம் உடனடியாக காணிகளை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

பிரதேச ஒருங்கிணைப்புக்குழு இவ்விடயத்தில் உரிய முறையில் செயற்பட வேண்டும்” என மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg