Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நோர்வூட் பிரதேசத்தில் கார் விபத்து!

In இலங்கை
Published: 14:01 GMT, Jul 29, 2017 |
0 Comments
1363
icon_com
This post was written by : Ravivarman

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் இடம்பெற்ற கார் விபத்தில் இளைஞர்கள் மூவர் உயிர் தப்பியுள்ளனர்.

குறித்த கார் நுவரெலியாவிலிருந்து இரத்தினபுரிக்கு செல்லும் வழியில் அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

எதிரே வந்த பாரவூர்த்திக்கு இடமளிக்க முற்பட்டபோதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் காரில் பயணித்த மூவரும் எவ்வித காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

IMG-20170729-WA0021IMG-20170729-WA0024

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg