Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியா ஞானம் முன்பள்ளியின் கண்காட்சி நிகழ்வுகள்

In இலங்கை
Updated: 14:17 GMT, Jul 29, 2017 | Published: 14:17 GMT, Jul 29, 2017 |
0 Comments
1400
This post was written by : Ravivarman

வவுனியா, கற்குழி ஞானம் முன் பள்ளியின் சிறார்களின் கண்காட்சி நிகழ்வொன்று நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் முன்பள்ளி மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

முன்பள்ளியின் ஆசிரியர் மற்றும் கிராம அபிவிருத்திக் குழு தலைவர் திரு அன்ரனி ரெக்ஸன் ஆகியோரின் தலமையில் இடம்பெற்றது.

மேலும் இந்நிகழ்வில் சிறீரெலோ கட்சியின் இளைஞரணி தலைவர் திரு ப.கார்த்திக் பிரதம விருந்தினராகவும் கௌரவ விருந்தினர்களாக சிறீரெலோ இளைஞரணி செயலாளர் திரு டினேஸ் மற்றும் வவுனியா வை.எம்.சி.ஏ தலைவர் திரு பாரதி ஆனந்தன், கிராம அபிவிருத்தி குழு நிர்வாக உறுப்பினர் சலசுலோசன் ஆகியோர் கலந்து கொண்டு மலழைகளின் கண்காட்சி நிகழ்வைக் கண்டு களித்ததுடன் சிறார்களுக்கு பரிசில்களும் வழங்கி வைத்தனர்

இதனை தொடர்ந்து முன் பள்ளியின் கட்டிடத்திற்கு சிறீரெலோ கட்சியின் செயளாலர் நாயகம் ப.உதயராசாவினால் வழங்கப்பட்ட கூரைத்தகடுகளை கார்த்திக் மற்றும் டினேஸ் ஆகியோரால் கிராம அபிவிருத்திக்குழுத் தலைவர் ரெக்ஸன் அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

20527232_10209679081678452_1695674584_n 20527191_107166323291469_1001098861_n 20526549_107166259958142_281780914_n 20504224_107166243291477_1091951813_n 20464347_107166219958146_372322898_n 20464208_107166113291490_201170646_n 20428478_10209679081918458_320332244_n

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg