Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

செங்கலடியில் துப்பாக்கி முனையில் கொள்ளை!

In இலங்கை
Published: 04:22 GMT, Jul 30, 2017 |
0 Comments
1355
icon_com
This post was written by : Vithushagan
625.500.560.350.160.300.053.800.900.160.90 (1)

மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் உள்ள வீடொன்றில் இனந்தெரியாத நபர்கள் கைத்துப்பாக்கியை காட்டி சுமார் 5 இலட்ச ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள செங்கலடியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ள இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் குடும்பப் பெண்ணை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி முதலில் அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க மாலையை அபகரித்துள்ளனர்.

பின்னர் வீட்டில் வைத்திருந்த ஏனைய தங்க ஆபரணங்களையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.

இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மொத்தப் பெறுமதி சுமார் 5 இலட்ச ரூபாய் என்று பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg