Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஷாருக்கான் மிகவும் romantic மனிதன் அமீர்கான் அப்படியல்ல-அனுஷ்கா சர்மா

In சினிமா
Published: 05:01 GMT, Jul 30, 2017 |
0 Comments
1409
icon_com
This post was written by : Kemasiya
download (1)

ஷாருக்கான் மிகவும் romantic (ரொமான்ரிக்கான) மனுஷன், ஆனால் அமீர்கான் மிகவும் நுண்ணியமாக புத்திகூர்மையானவர், இவர்கள் இருவரிலும் எனக்கு பிடித்த விடயங்களும் இவை தான் என, ‘ஜப்ஹேரி மெட் சீஜல்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் பொழுது நடிகை அனுஷ்கா சர்மா கூறியுள்ளார்.

குறித்த ‘ஜப்ஹேரி மெட் சீஜல்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பொழுதே அனுஷ்கா சர்மா இவ்வாறு கூறியுள்ளார். ஷாருக்கான் தொடர்பில் மேலும் அவர் கூறுகையில், ஷாருகானுடன் காதல் காட்சியில் நடிப்பது சுலபமானது, அவருடைய கண்களில் ஒருவித உண்மை இருக்கும் அதை திரையில் பார்க்கும் பொழுது உணர்வீர்கள், என்னை பொறுத்தவரை ஷாருக்கான் ஒரு மைக்ரோ போனை கூட அழகாக ரொமான்ஸ் செய்வார் என கூறியுள்ளார்.

மேலும் அமீர்கான் பற்றி கூறிய அவர், அமீர்கான் மிகவும் பத்திசாலித்தனமானவர், எப்பவுமே அறிவு பூர்வமாக சிந்திப்பவர், அவரிடம் எனக்கு பிடித்த விடயம் அது தான். ஆனால் சில வேளைகளில் நாம் பேசும் பொழுது அவர் நம்மை கவனிக்கிறாரா இல்லையா என்பது புரியாது, அது தான் அவரிடம் எனக்கு பிடிக்காத விடயம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த இசை வெளியீட்டு விழாவின் பொழுது, உண்மையான வாழ்க்கையின் காதல் விடயத்தில் நான் மிகவும் கூச்ச சுபாவம் உடையவன் என்று ஷாருக்கான் கூறியுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg