Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஓகஸ்ட் 10 இல் ‘விவேகம்’ ரிலீஸ்?: ‘தல’ ரசிகர்கள் ஒரே குஷி

In சினிமா
Published: 04:48 GMT, Jul 30, 2017 |
0 Comments
1503
icon_com
This post was written by : Varothayan
Vivegam-waiting-for-Censor-release-10-August

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விவேகம்’ திரைப்படம் எதிர்வரும் ஓகஸ்ட் 10 திகதி வெளிவரும் எனக் கசிந்திருக்கும் செய்தி ‘தல’ ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளது. இந்நிலையில், கட்-அவுட், மேளதாளம், பாலபிஷேகத்துடன் படத்தை வரவேற்க ரசிகர்கள் தயாராகியுள்ளனர்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ஒருவர் நடித்து இந்த வருடம் வெளிவரவுள்ள முதலாவது படமாக ‘விவேகம்’ இருப்பதால் பல்வேறு எதிர்பார்ப்புக்கள் எழுந்துள்ளன. இந்த வருடம் இதுவரை, தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான ‘பாகுபலி 2′ படமே தமிழ்நாட்டிலும் மிகப்பெரும் வசூலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் ஓகஸ்ட் 10 இல் ‘வேதாளம்’ வெளிவரவுள்ளது.

இந்தப் படம் தற்போது தணிக்கைத் துறையினரிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது. நாளை தணிக்கைக் குழுவினர் படத்தினைப் பார்ப்பார்கள் எனவும் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைக்க அதிகம் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தணிக்கை முடிந்த கையோடு, பட வெளியீட்டுத் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனத்தெரிகிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg