Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ்நாடு பிரிமீயர் லீக்: ஹெட்ரிக் வெற்றியை நோக்கி தூத்துக்குடி அணி

In கிாிக்கட்
Published: 08:18 GMT, Jul 30, 2017 |
0 Comments
1285
icon_com
This post was written by : Anojkiyan
tyl

தமிழ்நாடு பிரிமீயர் லீக் ரி-ருவென்ரி தொடரின் 9வது லீக் போட்டியில், காரைக்குடி காளை அணியும், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

திருநெல்வெலி மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், காரைக்குடி அணிக்கு சுப்பரமணிய ஆனந்தும், ஸ்ரீகாந்த் அனிருதாவும் தலைமைதாங்குகின்றனர்.

தூத்துக்குடி அணி ஹெட்ரிக் வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. அந்த அணி தொடக்க போட்டியில் திண்டுக்கல்லை 7 ஓட்டங்களிலும், 3வது போட்டியில் மதுரையை 10 விக்கெட்டிலும் வென்று இருந்தது.

அதேபோல, காரைக்குடி காளை 2வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி தொடக்க போட்டியில் கோவை அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது. 2வது போட்டியில் மதுரை அணியை 43 ஓட்டங்களில் வெற்றிக்கொண்டிருந்தது.

இரு அணிகளும் சமபலம் பொருந்திய அணிகள் என்பதால் இப்போட்டியில் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg