Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பார்சிலோனா இசை நிகழ்ச்சியின் போது பரவிய தீ: 20,000 பேர் வெளியேற்றம்

In ஐரோப்பா
Updated: 07:31 GMT, Jul 30, 2017 | Published: 07:31 GMT, Jul 30, 2017 |
0 Comments
1749
This post was written by : Sylviya

ஸ்பெய்னின் பார்சிலோனாவில் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியொன்றின் போது ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அங்கிருந்த சுமார் 20,000 பேர் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (சனிக்கிழமை) ஏற்பட்ட குறித்த தீ விபத்து, இசை நிகழ்ச்சியை மெருகூட்டும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த வானவேடிக்கைகளாலேயே ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி தீயை கட்டுப்படுத்தும் நோக்கில் பல தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயற்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், குறித்த தீ விபத்தால் பொதுமக்கள் எவரும் உயிரிழக்கவோ அல்லது காயமடையவோ இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg