Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆட்டிறச்சி சூப் செய்வது எப்படி?

In
Published: 08:23 GMT, Jul 30, 2017 |
0 Comments
1171
icon_com
This post was written by : Kemasiya
1391412599elumbu20soup

தேவையான பொருட்கள்

1.ஆட்டிறைச்சி – 1/2 கிலோ

2. கரட் – 2 எண்ணம்

3. உருளைக்கிழங்கு – 2
4. பெரிய வெங்காயம் – 1

5. மைதா – 2 மேசைக்கரண்டி

6. பச்சைபட்டாணி – 1/2 கப்

7. கராம்பு – 5

8. ஏலக்காய் – 3

9. கறுவா பட்டை – சிறுதுண்டு

10. மிளகு – 1/2 தேக்கரண்டி

11. பால் – 1/2 கப்

12. உப்பு – தேவையான அளவு

செய்முறை

1. உருளைக்கிழங்கு கரட்டினை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

2. ஆட்டுக்கறியைச் சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

3. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், கராம்பு, ஏலம், மிளகு,கறுவா பட்டை, நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.

4. அதில் நறுக்கி வைத்துள்ள காய்களையும், கறியையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

5. பிறகு பாலையும், மைதா மாவினையும் சேர்த்து கலந்து வேகவிடவும்.

6. அதன்பின் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து, பச்சைப் பட்டாணியுடன் பாத்திரத்தை மூடியிட்டு நன்றாக வேகவிடவும்.

7. வெந்ததும் இறக்கிச் சூடாகப் பரிமாறவும்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg