Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொரிய தீபற்பத்திற்கு மேலாக பறந்த அமெரிக்க குண்டு வீச்சு விமானங்கள்

In உலகம்
Published: 09:42 GMT, Jul 30, 2017 |
0 Comments
2182
icon_com
This post was written by : Sylviya

அமெரிக்காவுக்கு சொந்தமான இரண்டு பி – 1பி ரக குண்டு வீச்சு விமானங்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொரிய தீபற்பத்திற்கு மேலாக பறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவல் அமெரிக்க விமானப்படையினரால் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அணுவாயுத சோதனை நடவடிக்கைகளால் உலகையே அச்சுறுத்தி வரும் வடகொரியாவுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை காட்டும் வகையிலேயே மேற்படி குண்டு வீச்சு விமானங்கள் பறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் வடகொரியாவால் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஏவுகணையானது அமெரிக்காவை எளிதில் தாக்கும் வல்லமை கொண்டது என தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து குறித்த நடவடிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg