Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மிரட்டி அடக்கிவிட முடியாது: பழனிசாமிக்கு எச்சரிக்கை விடுக்கும் ஸ்டாலின்

In இந்தியா
Updated: 17:15 GMT, Jul 30, 2017 | Published: 09:53 GMT, Jul 30, 2017 |
0 Comments
1488
icon_com
This post was written by : Puvanes
stalin_palanisamy001

ஜனநாயக விதிகளுக்கு கட்டுப்பட்டு போராடிக் கொண்டு வரும் தி.மு.கவை மிரட்டுவதன் மூலம் அடக்கிவிடலாம் என அ.தி.மு.க பகல் கனவு கண்டு வருகின்றது என தி.மு.கவின் செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் மூலமாகவே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த அறிக்கையின் ஊடாக, ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் அ.தி.மு.க அரசை முடிவுக்கு கொண்டு வர தி.மு.க தயங்காது என ஸ்டாலின் கூறியுள்ளார்.

விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போதும் தமிழக அரசு அதற்கு தடை பெற்றுள்ளது. குழம்பிய குட்டையில் மீன்களைப் பிடித்து வருகின்றவரே எடப்பாடி பழனிசாமி என்பது மக்களுக்குத் தெரியும்.

குடி மராமத்து பணிகள் தி.மு.க ஆட்சியில் போர் கால நடவடிக்கைகளில் மேற்கொள்ளப்பட்டன ஆனால் இப்போது ஏரிகளை தூர்வார தி.மு.கவினருக்கு அனுமதி அளிக்கக் கூடாது என தமழக முதல்வர் அதிகாரிகளை மிரட்டி வருகின்றார் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.கவின் தூர்வாரும் செயலைத் தடுக்கும் கேடு கெட்ட செயலை முதல்வர் செய்து வருகின்றார் என குற்றம் சுமத்திய அவர் , 40 கோடி இலஞ்சக் குற்றச்சாட்டில் சிக்கிய ஒருவரை டி.ஜி.பி யாக பழனிசாமி நியமித்துள்ளதோடு , 5.16 கோடி இலஞ்சம் பெற்ற அமைச்சர் விஜயபாஸ்கர் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஸ்டாலின் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg