Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆளுக்கேற்ற ஆடையை தெரிவு செய்வது எப்படி?

In
Published: 10:16 GMT, Jul 30, 2017 |
0 Comments
1196
icon_com
This post was written by : Kemasiya
images (2)

நடைமுறையில் இன்றைய பெண்கள் புது ஸ்ரைலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மேலும் தங்களுக்கு ஏற்ற உடை, ஆபரணம், மற்றும் கலர் என்பவற்றை தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக உள்ளார்கள். ஆனால் சில வேளைகளில் நமக்கு பொருத்தமான ஆடை ஆபரணங்களை தெரிவு செய்தால் மட்டுமே அழகாக ஜொலிக்க முடியும் என்பதனை மறந்து விடுகின்றார்கள்.

அந்த வகையில் பொருத்தமான ஆடை அபரணங்களை தெரிவு செய்வது எப்படி என நோக்கவோம். உயரமாகவும், ஒல்லியாகவும் உள்ள பெண்கள் குறுக்கே கோடுகள் போட்ட உடைகளையோ அல்லது பெரிய டிசன்கள் உள்ள உடைகளையோ அல்லது பெரிய கரைகள் போட்ட உடைகளை அணிந்ததால் பார்க்க அழகாக இருக்கும்.

குண்டாக உள்ள பெண்கள் சிறிய டிசன்கள் உள்ள உடைகளையும், சிறிய கோடுகள் போட்ட உடைகளையும், அகலம் குறைவாக உள்ள கரைகள் போட்ட உடைகள் அணிவது அழகாகவும், ஒல்லியாகவும் தெரியும்.

சிவப்பாக இருக்கும் பெண்களுக்கு கடும் கலரும், கருப்பாக இருக்கும் பெண்களுக்கு மெல்லிய் கலரும் பொருத்தமாக இருக்கும் என, பொதுவான கருத்து உள்ளது. ஆனால் அது மிகவும் தவறு. கருப்பாக இருக்கும் பெண்கள் மெல்லிய் கலர் உடை அணிந்தால், அவர்கள் மேலும் கருப்பாகத் தெரிவார்கள்.

ஆனால் சிவப்பாக இருக்கும் பெண்கள் மெல்லிய கலர் அணிந்தால் மேலும் அழகாகத் தெரிவார்கள். கருப்பான பெண்களுக்கு ஓவர் மெல்லியகலராகவும் இல்லாமல், ஓவர் கடும் கலராகவும் இல்லாமல்  நடுத்தரமான கலர்கள் தான் மிகவும் சிறந்தது. உதாரணமாக கருப்பான பெண்கள் நீள கலர் உடைகளை அணிந்தால் பார்க்க மிகவும் அழகாகவும்,கலராகவும் தெரிவார்கள்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg