Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முன்னுதாரணமான இந்தியா, அனைவரும் எடுக்க வேண்டிய உறுதி மொழியினை கூறுகின்றார் மோடி

In இந்தியா
Published: 10:58 GMT, Jul 30, 2017 |
0 Comments
1364
icon_com
This post was written by : Puvanes
modi_gst001

ஜி.எஸ்.டி வரியின் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதோடு, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளதாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மான் கீ பாத் எனப்படும் நிகழ்ச்சியில் இன்றைய தினம் பிரதமர் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜி.எஸ்.டி தொடர்பில் மத்திய மற்றும் மாநில அரசுகள் கூட்டாக முடிவுகளை எடுத்தன. இது ஒத்துழைப்பு கூட்டாட்சிக்கு நல்ல உதாரணம் என மோடி குறிப்பிட்டதோடு வெற்றிகரமாக ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தியதன் மூலம் மற்ற நாடுகளுக்கு இந்தியா ஒரு முன்னுதாரணமாக விளங்கும் எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை, சுத்தமின்மை, வறுமை, பயங்கரவாதம், சாதி மற்றும் மதவாதம் போன்றவற்றை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற உறுதிமொழியினை நாம் அனைவரும் எடுக்க வேண்டும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg