Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சியோமியின் எம்.ஐ. மிக்ஸ் 2 விரைவில் சந்தைக்கு

In அறிவியல்
Published: 11:43 GMT, Jul 30, 2017 |
0 Comments
1627
icon_com
This post was written by : Kemasiya
201707301434126886_1_mi-mix-2-1._L_styvpf

சியோமியின் எம்.ஐ. மிக்ஸ் 2 வடிவமைப்புக்கள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் சந்தைக்கு வருமென வாடிக்கையாளர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.

சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக எம்.ஐ. மிக்ஸ் 2 இருக்கிறது. குறித்த போன் பெரிய ஸ்கிறீன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் கசிந்துள்ளது.

இந்த ஆண்டின் துவக்கத்தில் எம்.ஐ. மிக்ஸ் 2 சார்ந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான லெய் ஜூன் தெரிவித்திருந்தார். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு பணிகளில் முந்தைய எம்.ஐ. மிக்ஸ் ஸ்மார்ட்போனினை வடிவமைத்த பிரென்ச் வடிவமைப்பாளரான பிலிப் ஸ்டார்க் ஈடுபடுவார் என லெய் ஜூன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வெய்போ தளத்தில் பதிவிடப்பட்டுள்ள புகைப்படங்களில் புதிய எம்.ஐ. மிக்ஸ் 2 இறுதி வடிவமைப்பு நிறைவடைந்த நிலையில் காட்சியளிக்கிறமை வாடிக்கையாளர்களுக்கு மகழ்ச்சியை கொடுத்துள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg