Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி-2 படப்பிடிப்பு ஓகஸ்டில் ஆரம்பம்

In
Updated: 12:14 GMT, Jul 30, 2017 | Published: 12:13 GMT, Jul 30, 2017 |
0 Comments
1212
icon_com
This post was written by : Surenth
23Am Pulikesi

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படத்தின் 2ஆம் பாகத்தின் போட்டோ ஷூட் முடிந்து ஓகஸ்ட் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. கொமெடி நடிகராக நடித்து வந்த வடிவேலு இந்த திரைப்படத்திற்குப் பிறகுதான் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார்.

ஆனால் 23ஆம் புலிகேசிக்குப் பிறகு எந்த திரைப்படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. விஜய்யை வைத்து புலி திரைப்படத்தையும் வேறு சில திரைப்படங்களையும் இயக்கிய சிம்புதேவனும் தோல்வியால் துவண்டு வந்தார். இந்நிலையில் இம்சை அரசன் 23ம் புலிகேசி இரண்டாம் பாகத்தை ஆரம்பித்துள்ளனர்.

சமீபத்தில் வடிவேலுவை வைத்து சென்னை ஏவி.எம். ஸ்டுடியோவில் போட்டோ ஷூட் நடத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்னும் ஓரிரு நாட்களில் படப்பிடிப்பை தொடங்க இருக்கின்றனர். 23ஆம் புலிகேசி முதல் பாகத்தை தயாரித்த இயக்குநர் ஷங்கர் தனது எஸ்.பிக்சர்ஸ் மூலம் லைகா நிறுவனத்துடன் இணைந்து இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg