Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நுவரெலியாவில் சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிரான ஆர்ப்பாட்டம்!

In இலங்கை
Updated: 12:44 GMT, Jul 30, 2017 | Published: 12:43 GMT, Jul 30, 2017 |
0 Comments
1390
This post was written by : Ravivarman

சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியாவில் பல்கலைகழக மாணவர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50ற்கும் அதிகமான பல்கலைகழக மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்பதாக எதிர்ப்பு பேரணி ஒன்று நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை வளாக பகுதியிலிருந்து ஹாவா எலிய நகர் ஊடாக நுவரெலியா நகரத்தினை நோக்கி முன்னெடுக்கப்பட்டது.

அதன்பின் ஆர்ப்பாட்டகாரர்கள் நுவரெலியா தபால் நிலையத்திற்கு முன்பதாக பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அரசாங்கம் சைட்டத்தை மூட வேண்டும் அல்லது அரசுடமையாக்க வேண்டும், கல்வியை தனியார் மயப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

DSC05130 DSC05117 DSC05112 DSC05108 DSC05098

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg