Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நுரைச்சோலை அனல் மின் நிலையம் அடுத்த வாரம் வழமைக்குத் திரும்பும் !

In இலங்கை
Updated: 15:24 GMT, Jul 30, 2017 | Published: 15:24 GMT, Jul 30, 2017 |
0 Comments
1533
This post was written by : Ravivarman

நுரைச்சோலையில் செயலிழந்துள்ள அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகள் அடுத்த வாரம் முதல் வழமைக்குத் திரும்பும் என மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல் மின் நிலையங்களின், மூன்றாவது அனல் மின் நிலையத்தில் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டதனால் 300 மெகாவோட்ஸ் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பு இழந்துள்ளது.

தற்போது மின்வெட்டின்றி மின்விநியோகத்தை மேற்கொள்வது பெரும் சவாலாக அமைந்திருப்பதாக அமைச்சின் அபிவிருத்திப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான சுலக்ஷனா ஜயவர்த்தனா தெரிவித்துள்ளார்.

மின்பாவனை அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் அதனைக் கட்டுப்படுத்துவதற்காக சில பிரதேசங்களில் உடனடியாகவே மின்விநியோகத் தடை மேற்கொள்ளவேண்டி ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg