Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உமா ஓயா செயற்திட்டம் : அமைச்சரவை இணைக்குழு மீண்டும் கூடுகின்றது!

In இலங்கை
Published: 04:22 GMT, Jul 31, 2017 |
0 Comments
1288
icon_com
This post was written by : Vithushagan
93361f4f1d5955021b51dbb7fcde366d_XL

உமா ஓயா பலநோக்கு செயற்திட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை இணைக்குழு இன்று (திங்கட்கிழமை)  பதுளை மாவட்ட செயலகத்தில் மீண்டும் கூடவுள்ளது.

பதுளை மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, உமாஓயா செயற்திட்டம் ஆகியவற்றின் அதிகாரிகள் உட்பட ஏனைய நிறுவனங்களின் அதிகாரிகளுடன் இந்த அமைச்சரவை இணைக்குழு கலந்துரையாடவுள்ளதாக குழுவின் உறுப்பினரான அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வழங்கிய பணிப்புரைக்கு அமையவும், இணைக்குழுவின் பரிந்துரைக்கு அமையவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து அங்கு ஆராயப்படும் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg