Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெனிசுவெலாவில் கடும் மோதல்: குறைந்தது 10 பேர் உயிரிழப்பு

In உலகம்
Published: 04:52 GMT, Jul 31, 2017 |
0 Comments
1647
icon_com
This post was written by : Sylviya
02

வெனிசுவெலாவில் நடத்தப்பட்ட சட்டமன்றத் தேர்தலை குழப்பும் வகையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த தேர்தல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்டுள்ளது. மேற்படி மோதலில் உயிரிழந்தவர்களுள் எதிர்க்கட்சியின் இளைஞர் அணித் தலைவர், அரசாங்க சார்பு வேட்பாளர் மற்றும் அந்நாட்டு படைவீரர் ஆகியோர் உள்ளடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அரசியலமைப்பை மாற்றியமைக்கும் வண்ணமும் அதன் காங்கிரஸ்சை இரத்து செய்யும் வகையிலும் புதிய அதிகாரங்களுடன் கூடிய சட்டசபையை உருவாக்குவது தொடர்பிலேயே இந்த தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், வெனிசுவெலா ஜனாதிபதி நிக்கோலஸ் மடுரோவினால் அதிகாரங்களை கைப்பற்றும் முயற்சியாகவே குறித்த தேர்தல் பார்க்கப்படுகின்றது என அந்நாட்டின் எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

எனினும், புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்பட்டாலேயே நாட்டில் சமாதானம் ஏற்படுத்தப்படும் என ஜனாதிபதி நிக்கோலஸ் மடூரோ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த தேர்தலின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg