Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

3 தங்கப்பதக்கம் வென்று அமெரிக்க நீச்சல் வீரர் உலக சாதனை

In விளையாட்டு
Published: 05:32 GMT, Jul 31, 2017 |
0 Comments
1353
icon_com
This post was written by : Varothayan
caeleb-dressel-usa-yeah-2017-world-champs

ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் இடம்பெற்ற உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில், ஒரே இரவில் 3 தங்கப்பதக்கம் வென்று அமெரிக்க நீச்சல் வீரர் சாதனை படைத்துள்ளார்.

நேற்றுடன் நிறைவு பெற்ற இப்போட்டியில், அமெரிக்க நீச்சல் வீரர் காலெப் டிரஸ்செல் நேற்று முன்தினம் இரவில் 50 மீட்டர் பிரீஸ்டைல், 100 மீட்டர் பட்டர்பிளை, 4 x 100 மீட்டர் பிரீஸ்டைல் கலப்பு பிரிவு ஆகிய பந்தயங்களில் அடுத்தடுத்து பங்கேற்று மூன்றிலும் தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார்.

இரண்டு மணி நேரத்தில் மூன்று போட்டியிலும் மின்னல் வேகத்தில் நீந்தி வியப்பூட்டிய 20 வயதான டிரஸ்செல், இதன் மூலம் உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரே இரவில் 3 தங்கப்பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில், ஏற்கனவே 100 மீட்டர் பிரீஸ்டைல், 4 ஒ 100 மீட்டர் மெட்லே கலப்பு, 4 x 100 மீட்டர் பிரீஸ்டைல் ஆகிய பிரிவுகளிலும் அவர் தங்கம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg