Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொழும்பு டெஸ்ட்: சண்டிமல் உள்ளே – ஹேரத் வெளியே!

In கிாிக்கட்
Updated: 06:34 GMT, Jul 31, 2017 | Published: 06:34 GMT, Jul 31, 2017 |
0 Comments
2103
This post was written by : Varothayan

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 3 ஆம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில், சுகயீனம் காரணமாக முதல் போட்டியில் விளையாடாத இலங்கை அணித் தலைவர் தினேஷ் சண்டிமல் இப்போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, முதல் போட்டியில் காயமடைந்த சுழல்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத், இரண்டாவது போட்டியில் களமிறங்குவது சற்றுச் சந்தேகமானது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்விடயம் குறித்து இலங்கைக் கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவரும் முகாமையாளருமான அசங்க குருசிங்ஹ தெரிவிக்கையில், ‘சண்டிமல் கடந்த சில தினங்களாக பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். எனவே, அடுத்த போட்டியில் பங்கேற்கும் உடல்தகுதியுடன் உள்ளார். ஹேரத்தின் விரலில் ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாகக் குணமடையாததால், எதிர்வரும் நாட்களில் அவரின் முன்னேற்றத்தைப் பொறுத்து போட்டியில் விளையாடக்கூடிய வாய்ப்பு உண்டு’ என்றார்.

இதேவேளை, காயமடைந்துள்ள அசேல குணரத்னவுக்கு பதிலாக தனஞ்சய டீ சில்வா அணியில் உள்வாங்கப்பட்டுள்ளார். சண்டிமல் மீண்டும் அணிக்கு வருவதால் தனுஷ்க குணதிலக அணியை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. ஆனாலும், தனஞ்சய அல்லது தனுஷ்க இவர்களில் ஒருவரே அணியில் இடம்பிடிப்பர் எனவும் குருசிங்ஹ குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg