Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பூதாகரமாக வெடிக்கும் பகவத்கீதை, குர்ஆன், பைபிள் விவகாரம்: உளவுத்துறை தீவிர விசாரணை

In இந்தியா
Updated: 09:29 GMT, Jul 31, 2017 | Published: 06:37 GMT, Jul 31, 2017 |
0 Comments
1534
icon_com
This post was written by : Puvanes
bagavat_gita001

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்தில் வைக்கப்பட்ட குர்ஆன், பைபிள் அகற்றப்பட்டமை தொடர்பில் மத்திய உளவுத்துறையினர் விசாரணை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராமேஸ்வரத்திற்கு அருகே அமைக்கப்பட்ட அப்துல் கலாம் மணிமண்டபத்தில் காணப்பட்ட கலாமின் சிலைக்கு அருகில் பகவத் கீதை மட்டும் வைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறுபட்ட சர்ச்சைகள் வெடித்தன.

இந்த நிலையில் கலாமின் பேரன் சலீம் நேற்றைய தினம் கலாமின் சிலைக்கு முன்பாக பகவத் கீதையுடன் சேர்த்து குர்ஆன் மற்றும் பைபிள் போன்ற புனித நூல்களை வைத்ததோடு “கலாம் மும்மதங்களுக்கும் அப்பாற்பட்டவர் எனவும் தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர் மீண்டும் குர்ஆனும், பைபிளும் கலாமின் சிலைக்கு அருகில் இருந்து அகற்றறப்பட்டு வேறு ஓர் கண்னாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளன. குறித்த விடயம் மீண்டும் பல்வேறுபட்ட சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதனைத் தொடர்ந்து புனித நூல்களை அங்கிருந்து ஏன் அகற்றப்பட்டது என்பது தொடர்பில் உளவுத்துறை தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg