Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழுக்கு நேர்ந்த நிலை: தமிழகம் முழுவதும் பாரிய போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை

In இந்தியா
Published: 07:03 GMT, Jul 31, 2017 |
0 Comments
1459
icon_com
This post was written by : Puvanes
seeman_tamil001

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக பிரகடனம் செய்யாவிட்டால் தமிழகம் முழுவதும் பாரிய போராட்டம் வெடிக்கும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து தமிழ் போராட்டக்குழு மதுரையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றது.

5ஆவது நாளாக இன்று தொடரும் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட போதே சீமான் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டில் ஏனைய மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களின் மொழிகள் வழக்கு மொழிகளாக காணப்படுகின்றன. எனினும் தமிழகத்தில் மாத்திரம் அந்த நிலை இல்லை என சீமான் கூறியதோடு இந்த விடயத்தினை மத்திய மாநில அரசுகள் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg