Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்கொட்லாந்தில் பெஷன்டேல் நினைவு தினம் அனுஷ்டிப்பு

In
Published: 07:38 GMT, Jul 31, 2017 |
0 Comments
1815
icon_com
This post was written by : Sylviya
07 - 1

பெஷன்டேல் போர் நடைபெற்று தற்போது நூறு ஆண்டுகள் கடந்துள்ளதை நினைவுகூரும் வகையில் ஸ்கொட்லாந்தில் உள்ள நூற்றுக்கணக்கான மக்கள் இன்று (திங்கட்கிழமை) அணி திரண்டுள்ளனர்.

முதலாம் உலகப்போர் காலத்தில் நடைபெற்ற குறித்த போரில் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த எண்ணிலடங்கா வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். அந்த உயிர் தியாகத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் அவர்களை நினைவுகூரும் வகையிலுமே மேற்படி நிகழ்வு ஸ்கொட்லாந்தில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

குறித்த போரில் கூட்டுப்படையைச் சேர்ந்த சுமார் 325,000 துருப்புக்கள் மற்றும் 260,000 ஜேர்மனிய துருப்புக்கள் உயிரிழக்க நேரிட்டது.

இந்நிலையில், இந்த போரை வர்ணித்திருந்த மறைந்த கவிஞர் சஸ்சூன் (Siegfried Sassoon), “நரகம்” எனும் சொல்லாலேயே பெஷன்டேல் போரை வர்ணிக்க முடியும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

7 - 2
07 - 3
07 - 4
Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg