Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எஸ்டோனிய ஜனாதிபதியுடன் அமெரிக்க துணை ஜனாதிபதி பேச்சுவார்த்தை

In ஐரோப்பா
Published: 10:32 GMT, Jul 31, 2017 |
0 Comments
1613
icon_com
This post was written by : Sylviya

எஸ்டோனியாவின் பிரதமர் ஜூரி ரட்டாசை (Juri Ratas) அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

குறித்த பேச்சுவார்த்ழைத நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள மைக் பென்ஸ், எஸ்டோனியாவுக்கான விஜயத்தை நிறைவு செய்துகொண்டு மொன்டிஜெனீரோ மற்றும் ஜோர்ஜியா ஆகிய நாடுகளுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பேச்சுவார்த்தையின் போது டிஜிட்டல் தொடர்பான சிக்கல்கள், பாதுகாப்பு மற்றும் இணைய பாதுகாப்பு தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான ஒத்துழைப்பு தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதே வேளை இந்த சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள எஸ்டோனிய ஊடகங்கள், விமான எதிர்ப்பு ஏவுகணைகளை எஸ்டோனியாவுக்கு கொண்டு வருவது குறித்தும் மேற்படி இருநாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இணைய பாதுகாப்பு தொடர்பில் இன்று எஸ்டோனிய ஜனாதிபதி கெர்ஸ்டி கல்ஜூலெய்ட்டுடன் பென்ஸ் பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் அதனைத் தொடர்ந்து பிராந்திய பாதுகாப்பு மற்றும் ரஷ்யாவுடனான உறவுகள் தொடர்பில் லட்வியா மற்றும் லித்துவேனிய ஜனாதிபதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg